ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் – அரையிறுதியில் ஸ்ரீகாந்த் | Hong Kong Open Badminton

1032

சில நாட்களுக்கு முன்பு ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர்கள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த தொடரின் காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி சீனாவைச் சேர்ந்த சென் லாங்கை எதிர்கொண்டார். முதல் செட்டை ஸ்ரீகாந்த் கிதாம்பி 21-13 என எளிதில் கைப்பற்றினார்.

2-வது செட் தொடங்குவதற்கு முன் சென் லாங் காயத்தால் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதனால் ஸ்ரீகாந்த் கிதாம்பி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் அரையிறுதிக்கு ஸ்ரீகாந்த் கிதாம்பி முன்னேறியுள்ளார். சென் லாங் உடன் ஸ்ரீகாந்த் கிதாம்பி 8 முறை மோதியுள்ளார். இதில் இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of