சிவகார்த்திகேயனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீ-காந்த்! எந்த விஷயத்துல தெரியுமா?

379

தமிழகத்தில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் நடிகர் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் ஆகியோர் வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் இல்லாததால், வாக்குச்சாவடி அலுவலரிடம் சிறப்பு அனுமதி பெற்று வாக்களித்தனர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக தலைமை தேர்தல் அதிசாரி சத்யபிரதா சாஹூ, சிவகார்த்திகேயன் போன்று நடிகர் ஸ்ரீகாந்தும், விதியை மீறி வாக்களித்துள்ளார் என அறிக்கை பெறப்பட்டுள்ளது என்றும், வாக்காளர் பட்டியலில் இருந்து சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் பெயர் நீக்கப்பட்டது பற்றியும் விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய சத்ய பிரதா சாஹூ, தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of