இலங்கை – பாகிஸ்தான் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது

405

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்றைய ஆட்டத்தில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் விளையாடுவதாக இருந்தது. போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர்.

இந்நிலையில் பிரிஸ்டல் மைதானத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது. போட்டி தொடங்கும் வேளையில் மழை தீவிரமாக பெய்ய ஆரம்பித்ததால் ஆடுகளம் ஈரப்பதமானது. இதனால் டாஸ் போடுவதற்கு முன்பே ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டத்தை தொடர முடியவில்லை. எனவே ஆட்டம் கைவிடப்படதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டு உள்ளது

இதனால் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் புள்ளிகள் பட்டியலில் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of