இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்! சந்தோகிக்கப்படும் நபர்களின் புகைப்பட வெளியீட்டால் சர்ச்சை!

536

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்பாக 3 பெண்கள் உட்பட 9 பேரின் புகைப்படங்களை இலங்கை அரசு நேற்று வெளியிட்டது.

இதில் அமரா மஜீத் என்ற இளம்பெண்ணின் புகைப்படும் தவறுதலாக இடம்பெற்றுள்ளது.

இவர் அமெரிக்க இஸ்லாமிய சமூக ஆர்வலர் என்றும், தி ஃபாரினர்ஸ் புத்தகத்தின் ஆசிரியர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பிரபலமான அமரா மஜீத் தொடர்பாக பத்திரிகைகள் மற்றும் நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளது.

இவரது புகைப்படம் குண்டுவெடிப்பில் சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.