இலங்கை குண்டுவெடிப்பு :பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

518

இலங்கை குண்டு வெடிப்பில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, டென்மார்க், ஜப்பான், பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பில், 3 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று காலை கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள தகவலில், மேலும் 2 இந்தியர்கள் பலியாகி இருப்பதாக தெரிவித்துள்ளது.

கேஜி. ஹனுமந்தரயப்பா, எம்.ரங்கப்பா ஆகிய இரு இந்தியர்களும் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்து இருப்பதாக இந்திய தூதரகம் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of