இலங்கை குண்டு வெடிப்பு.., திடீர் திருப்பம்.., வர்த்தக அமைச்சரின் சகோதரர் கைது ?

541

கடந்த 21 ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 350-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் உலக நாடுகளை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. அதுமட்டுமின்றி, அவர்கள் வீடியோ ஒன்றையும் வெளியிட்டனர்.

அதன்பின் இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய முகமது யூசுப் இப்ராஹிம் என்பவரின் குடும்பம் விசாரிக்கப்பட்டது.

இவரின் மகன்கள் இன்சாப் அஹமது இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் அஹமது இப்ராஹிம் ஆகியோர் குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக ஆளும் கட்சியை சேர்ந்த இலங்கை வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியூதின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கும் குண்டு வெடிப்பிற்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. போலீசார் இவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of