தூக்கிலிடுபவர் பணிக்கு 100 பேர் விண்ணப்பம்

179

இலங்கையில் 1976-ம் ஆண்டுக்கு பிறகு அங்கு இதுவரை யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மரண தண்டனை கைதியை தூக்கில் போடும் பணியில் ஈடுபடுபவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.

அதில் இருந்து அப்பதவி காலியாக உள்ளது. எனவே அதற்கு பணி நியமனம் செய்ய ஆட்கள் தேவை என இலங்கை நீதி மற்றும் சிறை மறு சீரமைப்பு துறை விளம்பரம் செய்தது.

விண்ணப்பிக்க கடைசி தேதியாக கடந்த மாதம் (பிப்ரவரி) 25 என அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து அப்பணிக்கு 100 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் அமெரிக்கரும் ஒருவர். தற்போது தூக்கிலிடும் பணிக்கு ஊழியர் தேர்வு நடைபெற்று வருகிறது.

இலங்கையில் போதை பொருள் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட 48 பேர் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்னும் 2 மாதங்களில் இவர்களது தண்டனை நிறைவேற்றப்படும் என அதிபர் மைத்திரி பால சிறிசேனா அறிவித்திருந்தார்.

ஏற்கனவே இப்பணிக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்தவர் விலகி விட்டதால் நிரந்தர ஊழியரை நியமிக்க ஆள் தேர்வு நடை பெறுகிறது.