“இலங்கை தமிழர்கள்.. இந்திய குடியுரிமை..” நிர்மலா சீதாராமன் அசத்தல் அறிவிப்பு..

601

சென்னை மயிலாப்பூரில் பல்கிவாலா நூற்றாண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் நட்பு ரீதியான உறவுகள் வலுவான நிலையில் உள்ளது என்றும், மருத்துவம், அடிப்படை கட்டமைப்புகள் உட்பட பல்வேறு துறைகளில் ஜி.டி.பி 61 சதவிகிதம் உயர்ந்துள்ளன எனவும் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி சம்பந்தமான வழக்குகள் 95 சதவிகிதம் சுமூகமான முறையில் நிறைவடைந்துவிட்டன எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அண்டை நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கவே குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், அதற்காக அகதிகளாக இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட மாட்டாது என்று அர்த்தம் கிடையாது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் இலங்கை தமிழர்கள் 95 ஆயிரம் பேர் முகாமில் அகதிகளாக இருப்பதாகவும், அவர்களுக்கு குடியுரிமை அளிக்க வழிவகை செய்யப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of