இலங்கை அதிபர் சிறிசேனா ஹிட்லர் போன்று நடந்து கொள்ள கூடாது – ரணில் விக்ரமசிங்கே

327

இலங்கை அதிபர் சிறிசேனா ஹிட்லர் போன்று நடந்து கொள்ள கூடாது என ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

கொழும்புவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசாங்கத்தில் உள்ள அனைவரும் அரசியல் சட்டத்தை காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது குறித்து சட்டப்பூர்வ அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

தேர்தலுக்கு தாங்கள் பயந்தவர்கள் இல்லை என்றும், எந்த தேர்தலையும் சந்திக்கத் தயராக இருப்பதாக கூறினார்.

அதேசமயம் அதிபர் சிறிசேனா நீதிமன்ற உத்தரவுப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும், தவறினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என எச்சரித்தார்.