“சீமான்.., போதும் நிறுத்திக்கொள்ளுங்கள்..” இலங்கை தமிழ் எம்பியின் பளார் பேட்டி..!

2422

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடைதோறும் பேசி வருகிறார். இதற்கு அவரது ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்தாளும், நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை மட்டகளப்பு எம்.பி. யோகேஸ்வரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சீமான் போன்ற அரசியல்வாதிகள் எல்லா பிரச்சனையும் தீர்ந்த பிறகு, வெறும் பேச்சு மட்டும் பேசுவதாக தெரிவித்தார்.

மேலும், விடுதலைப் புலிகள் தாங்கள் செய்கின்ற செயலை ஒப்புக் கொள்ளும் கொள்கை உடையவர்கள். ராஜீவ்காந்தியை கொலை செய்ததாக ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், இங்குள்ளவர் பேசுகிற பேச்சால் தங்களுக்குத் தான் பிரச்சனை என்றும் எம்.பி. யோகேஸ்வரன் தெரிவித்தார்.

Advertisement