பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது இலங்கை | T20 | Pak Vs Sri Lanka

338

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் போட்டி தொடரில் 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் இலங்கை அணி 2-0 என வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்றிரவு நடந்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 7 விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது. 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான்.

ஆனால், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இலங்கை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of