புதிய அரசியலமைப்புக்கு எதிராக வாக்களிக்கத் தயார் என்று அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி புதிய அரசியலமைப்பு தொடர்பான வரைவு தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் முறைப்படி தயாரிக்கப்படாத அரசியலமைப்பு வரைவுக்கு எதிராக வாக்களிக்கத் தயார் என்று அதிபர் சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, புதிய அரசியலமைப்பை வரைவு கொண்டு வரப்படுவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டியுள்ளார். மேலும் புதிய அரசியலமைப்பு வரைவை நிறைவேற்ற விடமாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of