சீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi

278

இமைக்கா நொடிகள், டிமாண்டி காலனி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, தற்போது ’விக்ரம்-58’ படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்துடன், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு “இசைப்புயல்” ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது. பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தனர்.

இந்நிலையில், இப்படத்தில் கேஜிஎப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.