SI வில்சன் கொலை வழக்கு..! கேரளாவில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி..!

267

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கேரளாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் களியக்காவிளையிலுள்ள சோதனைச் சாவடியில் கடந்த 8 ஆம் தேதி பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அப்துல் சமீம், தவுபீக் ஆகிய இருவர்கள் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரையும் 10 நாட்களில் போலீஸ் காவலில் எடுத்து தமிழக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் கேரளாவில் தங்கியிருந்த இடங்களுக்கு அழைத்து சென்று தமிழக போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, ளு.ளு.ஐ. வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை, எர்ணாகுளத்தில் கழிவு நீர் ஓடையில் இருந்து போலீசார் கண்டெடுத்தனர்.

வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு சிம்கார்டுகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை, க்யூ பிரிவு போலீஸாரிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பான N.ஐ.யு-க்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.