ஸ்டாலினுக்கு ‘சிறந்த மனிதர்’ விருது: ஆர்.எஸ்.பாரதி ஒப்படைத்தார்

404

கேரள மாநிலம், திருவனந்தபுரம், பாளையம், வி.ஜே.டி. அரங்கத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற ‘ப்ரவசி பாரதிய நாள் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, ‘சிறந்த மனிதர்’ விருதினை கேரள மாநில ஆளுநர் நீதிபதி  பி.சதாசிவம் ஆகியோர் வழங்கினார்கள்.

இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பாக அமைப்புச்  செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி பெற்றுக்கொண்டார்.

இன்று காலை அண்ணா அறிவாலயத்தில்  ஆர்.எஸ்.பாரதி  ‘சிறந்த மனிதர்’ என்ற விருதை ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்.

அப்போது முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of