தமிழக அரசின் அவதூறு வழக்கு ஸ்டாலின் நேரில் ஆஜராக விலக்கு

305
stalin

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளில் நேரில் ஆஜராவதில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு விலக்கு அளித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது.

இது தொடர்பான வழக்குகள் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் எம்.பி.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், வழக்கு விசாரணைகளுக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார். இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராவதில் இருந்து ஸ்டாலினுக்கு விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டது. அடுத்த கட்ட விசாரணையை வரும் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை சிறப்பு நீதிமன்றம் ஆணையிட்டது.