சீசனுக்கு வந்து சீன் காட்டும் மோடி.., ஆவேசத்தில் ஸ்டாலின்

661

விருதுநகர் பட்டம்புதூரில் நடைபெற்ற தென்மண்டல மாநாட்டில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசுகையில்,

அ.தி.மு.க. ஆட்சிக்கும் பா.ஜ.க. ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க இந்த கூட்டம் ஒரு தொடக்கப் புள்ளியாக அமையும். தி.மு.க. கூட்டணியுடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப் போகும் வரலாறு மீண்டும் நடக்கப்போகிறது.

காங்கிரசுடன் இந்திரா காந்தி காலம் முதல் கூட்டணி அமைத்து வரும் எங்களை சந்தர்ப்பவாத கூட்டணி என்று சொல்லும் பிரதமர் மோடி வைத்திருக்கும் கூட்டணி என்ன விதமான கூட்டணி? எது சந்தர்ப்பவாத கூட்டணி?ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பார் என்று ஓபிஎஸ் கூறியது மிகப்பெரிய பொய், ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் கூட்டணி வைத்திருக்க மாட்டார்.

ஐந்து வருடம் எந்த வளர்ச்சியும் வரமுடியாத நிலையில், மோடி ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சியடையும் என்கிறார் ஓபிஎஸ்.

விலைவாசி குறைந்துள்ளது என்கிறார் இபிஎஸ், ஆனால் கியாஸ் உள்பட எல்லாவற்றின் விலைகளும் உயர்ந்துவிட்டது

தேர்தல் நெருங்குவதால் தான் விவசாயிகளுக்கு ரூ6000 நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயரவில்லை என்று முதலமைச்சர் கூறினார், ஆனால் மக்கள் விலைவாசி உயர்வதை பற்றி கிராமசபை கூட்டத்தில் குற்றம் சாட்டினர்.சட்டம் ஒழுங்கில் முன்னணி மாநிலம் என்று கூறினார்கள். ஆனால் குட்கா விவகாரத்தில் சுகாதாரதுறை அமைச்சரிடமும் டிஜிபி ராஜேந்திரனிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் என்பதை நாங்கள் தடுக்க வில்லை. முறையாக கொடுங்கள் என்கிறோம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை குறைக்க அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்தல் வருவதால் மோடி அடிக்கடி தமிழகம் வந்து சீன் காட்டுகிறார். 130 கோடி நாட்டு மக்கள்தான் என் குடும்பம் என்று குமரி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அந்த மக்களுக்கு என்ன செய்தார்?அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் வட மாநிலத்தவர்கள் அதிகளவில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். தமிழக இளைஞர்களுக்கு மோடி அரசு துரோகம் செய்கிறது. தமிழகத்தின் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

சேது சமுத்திரம் திட்டம் என்ன நிலையில் இருக்கு? மேகதாது அணையை ஏன் தடுக்கவில்லை? நீட் தீர்மானம் என்ன ஆனது? குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுகணை தளம் என்னவானது?

நம் கையில் மாநில அரசு, நாம் கை காட்டுவது மத்திய அரசு என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of