இது நிதி பட்ஜெட் இல்ல…, உதவாக்கரை பட்ஜெட்…, ஸ்டாலின் காட்டம்

600

2019-20 நிதியாண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையை இன்று சட்டப்பேரவையில் துணை முதலைச்சரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் 2 மணி நேரம் 40 நிமிடங்களாக தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் நிறைவு பெற்ற பின் வெளியே வந்த தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் பட்ஜெட் குறித்து கேள்வி கேட்ட போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

அவற்றில் சில…,

“வேலைவாய்ப்பை பற்றி இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை. சங்கீத வித்வான் போலவே சொன்னதை திரும்ப, திரும்ப பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது.

ஏழை, எளிய மக்களுக்காக பயன்படாத உதவாக்கரை பட்ஜெட்டாக உள்ளது. கொட நாட்டில் எப்படி கொள்ளை அடித்தார்களோ அப்படிதான் தமிழக பட்ஜெட்டும் கொள்ளை அடிப்பதற்காக உள்ளது.

பிரதமர் அலுவலகமே போர் விமானத்தை நேரடியாக வாங்கியுள்ளது தி இந்து நாளிதழின் ஆசிரியரின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement