பேரன் பேத்திகளின் ஆசைக்கு புஃல் ஸ்டாப் வைத்த ஸ்டாலின்! இந்த முறை மிஸ் ஆயிடிச்சே!

768

மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன், மகள் செந்தாமரை, மருமகள் கிருத்திகா உதயநிதி மற்றும் குழந்தைகள் என கோடைவிடுமுறையை ஒட்டி ஸ்பெயின் சென்றுள்ளார்கள்.

மு.க.ஸ்டாலினும் இவர்களுடன் செல்வதாக இருந்ததாம். ஆனால் தேர்தல் ஆணையம் 4 தொகுதி இடைத்தேர்தலை அறிவித்ததால் தனது பயணத்தை அவர் ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது.

எவ்வளவு வேலைகள் இருந்தாளும் ஆண்டுக்கு ஒரு முறையாவது பேரன், பேத்திகளோடு ஸ்டாலின், வெளிநாட்டு சுற்றுலா செல்வது வழக்கம். இந்த முறை அது மிஸ் ஆகியுள்ளது. தனது தாத்தா வருவார் என்று எதிர்பார்த்த பேரன் பேத்திகளின் ஆசைகளுக்கு, ஸ்டாலின் தற்போது புஃல் ஸ்டாப் வைத்துள்ளார்.

மேலும், ஊருக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், பயணத்தை முடித்து விட்டு நடைபெற இருக்கும் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of