மு.க. ஸ்டாலினுக்கு தேர்தல் ஜூரம் வந்து விட்டது – முதல்வர்

338

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச். ராஜா சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார்.அவருக்கு ஆதரவாக முதல் அமைச்சர் பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசும்பொழுது, எச். ராஜா கோபக்காரர் தான். கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என்று கூறினார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தேர்தல் ஜூரம் வந்து என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி கொண்டிருக்கிறார். தூங்கி கொண்டிருக்கும் ஸ்டாலினை எழுப்பினால் என்னை திட்டிக்கொண்டேதான் எழுந்திருப்பார் என கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of