ஸ்டாலின் தலைமையில் 29-ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்

101

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 29-ம் தேதி தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.

தமிழக சட்டசபையில் அவற்றுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி வரும் நிலையில், தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of