இங்கே ஊழல், அங்கே ஊழல் என்று பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்

462

இங்கே ஊழல், அங்கே ஊழல் என்று ஸ்டாலின் நாள்தோறும் ஒரு பொய்யை சொல்லிக் கொண்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரியில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மக்கள் பிரச்சனைக்காக ஒருமுறை கூட டெல்லி சென்றதில்லை என்றும், மத்திய அமைச்சரவையில் பதவியை பெறுவதற்காக மட்டுமே டெல்லி சென்றதாக குற்றம் சாட்டினார்.

மேலும் இங்கே ஊழல், அங்கே ஊழல் என்று ஸ்டாலின் நாள்தோறும் ஒரு பொய் புகாரை சொல்லிக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.