கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பை நினைத்து ஸ்டாலின் பெருமைப்பட வேண்டும்

159

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற கிராம அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக வெற்றி பெற்ற இடங்களில், தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்தார்.

ஸ்டாலினுக்கு தற்போது சிறந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதை நினைத்து, அவர் பெருமைப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். மேலும், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக ஸ்டாலினின் குற்றச்சாட்டிற்கு, திமுக ஆட்சியில் 2 அமைச்சர்களை வைத்துக்கொண்டு காவல் ஆய்வாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of