திமுகவிற்கு டிடிவி தான் சவாலா? ஸ்டாலின் சென்ன பதில்?

347

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின், தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த வி.பி.கலைராஜன் திருச்சியில் இன்று திமுகவில் இணைந்தார்.

அவருக்கு திமுக சார்பில் வாழ்த்துகள் வந்த வண்ணம் உள்ளன. இதன்பிறகு நிருபர்களுக்கு ஸ்டாலின் பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-

“அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து, முன்பு செந்தில் பாலாஜி வந்திருந்தார். இப்போது கலைராஜன் திமுகவுக்கு வந்துள்ளார்.

அதிமுகவை விட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் திமுகவுக்கு சவாலாக இருக்குமா, என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், நாங்கள் யாரையும் சவாலாக கருதவில்லை.

எங்களுடைய பிரச்சினைகள் சவால்கள் எல்லாம் மத்தியில் இருக்கக்கூடிய பாசிச ஆட்சி, மாநிலத்தில் இருக்கக்கூடிய எடுபிடி ஆட்சிகளை அழிக்க வேண்டும் என்பதுதான்.

இதைத்தான்மிகவும் சவாலாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகிறோம்.”

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of