யாரை திருப்திப்படுத்த இது நடந்தது.., மு.க ஸ்டாலின் ஆவேசம்

625

நாடாளுமன்ற தேர்தலானது வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற இருக்கின்றனர். இதனால், அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து, பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்றிரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்பின், தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இது குறித்து திமுக தலைவர் முக. ஸ்டாலின் கூறுகையில்,

“யாரை திருப்திபடுத்த தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தலில் நடுநிலைமை என்ற தேர்தல் ஆணையத்தின் கோட்பாடு மோடியின் காலில் மிதிப்பட்டுக் கிடக்கிறது. ஜனநாயகத்தை காப்பாற்ற எங்களை வீதிக்கு வந்து போராடுகின்ற சூழலை உருவாக்கிவிட வேண்டாம். வேலூரில் எப்போது தேர்தல் நடத்தப்பட்டாலும் வெற்றி பெறப்போவது திமுக தான்” என ஸ்டாலின் கூறினார்.