சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஸ்டாலின் அறிக்கையால் பரபரப்பு

432

அதிமுகவை சேர்ந்த 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தால் சட்டசபை சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிமுகவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்க செய்ய அக்கட்சி முடிவு செய்து இருக்கிறது. அறந்தாங்கி தொகுதியின், ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் தொகுதியின், கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதியின் பிரபு ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.

இதற்கான பரிந்துரையை அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலிடம் அளித்தார். இதுகுறித்து தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், சபாநாயகர் என்பவர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.நடுநிலைமை தவறி மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுத்தால் பேரவைத் தலைவர் மீது திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும்.

ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பீதியில் அதிமுக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதிமுக ஆட்சியை தக்க வைத்துவிட வேண்டும் என பிரதமரும் ஆளுநரும் செயல்படுகிறார்கள்.

தேர்தல் முடிவுகள் வரவுள்ள நிலையில் 3 பேர் மீது நடவடிக்கை எடுப்பது கண்டனத்திற்குரியது.

பிரபு,ரத்தின சபாபதி,கலைச்செல்வன் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க கூடாது. சபாநாயகர் பாரபட்சமற்ற முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of