ஆறுமாதங்கள் வரை தள்ளி வைக்க வேண்டும் – ஸ்டாலின் விடாபிடி

434

ஊரடங்கு நீடித்துவரும் நிலையில் இந்த ஆண்டிற்கான சொத்துவரியை, உடனடியாக செலுத்தவேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்திருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் இதுவரை திரும்பவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாழ்வாதாரம் இழந்து மக்கள் தவித்துவரும் வேளையில், சொத்துவரி செலுத்த கட்டாயப்படுத்துவது மனிதநேயமற்றது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, சென்னை மாநகராட்சி, சொத்துவரி செலுத்தவேண்டும் என்ற அறிவிப்பை திரும்பப்பெறவேண்டும் என்றும் அவர்  கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை மாநகாரட்சிக்குட்பட்ட பகுதிகளில் குறைந்தபட்சம் ஆறுமாத காலத்திற்காவது சொத்துவரி வசூலிப்பதை தள்ளிவைக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of