தங்களது தலைவர்கள் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்க திராணி இருக்கிறதா? – ஸ்டாலின் கடும் சாடல்

281

பாஜக விற்கு தலைவர்கள் பெயரைச் சொல்லி ஓட்டுக் கேட்க அவர்கள் கட்சியிலேயே ஆள் இல்லையா என திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கன்னியாகுமரி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், பாஜக விற்கு தலைவர்களின் பெயரை சொல்லி ஓட்டு கேட்க அவர்கள் கட்சியில் ஆள் இல்லை என கூறினார்.

வடக்கே படேலையும்,தெற்கே காமராஜரையும் வைத்து ஓட்டு கேட்கும் பாஜக வினருக்கு அவர்கள் கட்சியில் எந்த தலைவரையும் கூறி ஓட்டு கேட்க திராணியில்லை என கடுமையாக விமர்சித்தார்.

வளர்ச்சி என்ற பெயரில் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் மோடி என கூறிய ஸ்டாலின், கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு அக்கவுண்ட்டிலும் 15 லட்சம் செலுத்துவோம் என கூறிய மோடி, 15 ரூபாயாவது டெபாசிட் செய்தார்களா?
கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு பதிலாக பணமதிப்பிழப்பால் நல்ல பணத்தை தான் அழித்தார் என விமர்சித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of