பக்தியை அரசியல் வியாபார பொருளாக மாற்ற சிலர் முயற்சி – ஸ்டாலின்

550

சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில், திமுக சிறுபான்மையினர் அணி சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,
தமிழகத்தில் இன்னும் 4 மாதங்களில் நல்லாட்சி அமைந்திடும் என்று கூறினார். திமுக ஆட்சியில் சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசின் சிறுபான்மையினர் விரோத சட்டங்களுக்கு அதிமுக ஆதரவு அளித்தது என்று கூறிய ஸ்டாலின், அதிமுக – பாஜக ஆகிய இரு கட்சிகள் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக உள்ளது என குற்றம் சாட்டினார்.

ஆன்மிக ரீதியாக மக்களை யாரும் குழப்ப முடியாது என்றும் மக்களின் ஆன்மிக உணர்வை தூண்டிவிட்டு சிலர் குளிர்காய முயற்சி செய்கின்றனர் எனவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். பக்தியை அரசியல் வியாபார பொருளாக ஆக்க சிலர் முயற்சி செய்வதாகவும் அவர் சாடினார்.

Advertisement