கருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்

320

கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் அதை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கேள்வி:- பெரும்பாலான கருத்து கணிப்புகளில் தி.மு.க. முந்தி இருக்கிறதே? தி.மு.க. முந்தி இருப்பதில் உங்களுக்கு சந்தோ‌ஷமா? இல்லையா?

பதில்:-  ஊடங்களில் வரக்கூடிய கருத்துக்கணிப்புகளை பொறுத்தவரை தி.மு.க.வுக்கு சாதகமாக வந்தாலும், ஒரு வேளை பாதகமாக வந்தாலும் அதை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்வதும் இல்லை.

எங்களை பொறுத்தவரையில் கலைஞர் மிகத் தெளிவாக பல நேரங்களில் குறிப்பிட்டு காட்டி இருக்கிறார்கள். இன்னும் 3 நாட்களில் மக்களுடைய கணிப்பு என்ன என்பது தெளிவாக தெரியப் போகிறது. அதைத்தான் நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

கேள்வி:- மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் அங்கம் வகிக்க தி.மு.க. தயாராக இருக்கிறதா?

பதில்:- 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததற்கு பிறகு அதற்குரிய விளக்கத்தை அளிக்கிறேன்.

கேள்வி:- சந்திரபாபு நாயுடு உங்களிடம் பேசினாரா?

பதில்:- அவர் பல நேரங்களில் பேசி தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து கருத்தை சொல்லி இருக்கிறார்.

கேள்வி:- 23-ந்தேதி டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வீர்களா?

பதில்:- தேர்தல் முடிவு 23-ந்தேதி மாலை அல்லது இரவுக்கு பிறகுதான் தெரிய வரும். அது தெரிந்ததற்கு பிறகு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தால்தான் பயன் உள்ளதாக இருக்கும். அதற்காகத்தான் காத்திருக்கிறோம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of