ஸ்டாலினை புகழ்ந்த பாஜக மூத்த தலைவர்..! இருப்பினும் நோஸ்கட் செய்த ஸ்டாலின்..! எதுக்கு தெரியுமா..?

979

பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்திர ராஜனுக்கு ஆளுநர் பதவி கிடைத்துள்ளதால், தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவராக இருப்பதற்கு சிலரின் பெயர் அடிப்படுகிறது. அந்த பெயர் பட்டியலில் முக்கியமான ஒருவர் சிபி ராதாகிருஷ்ணன்.

பாஜக மூத்த தலைவர்களில் முக்கியமான ஒருவராக இருக்கும் சிபி ராதா கிருஷ்ணன், திமுக தலைவர் முக ஸ்டாலின் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். இது தான் இணையதளத்தில் பேசுபொருளாக உள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட சிபி ராதாகிருஷ்ணன், வெற்றித்தளபதி என்றும், அவரது உழைப்பு தன்னை போன்ற பலரை இன்னும் உழைக்க வேண்டும் என உணரச்செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், உழைப்பின் மூலம் ஸ்டாலின் தங்களை வீழ்த்தி விட்டதாகவும் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.

அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்டாலின், நாங்கள் உங்களை வீழ்த்தவில்லை, தோற்கடித்துள்ளோம். நாங்கள் என்றுகூட சொல்லவிரும்பவில்லை, மக்கள் தோற்கடித்துள்ளனர் என்று கூறி பதிலடி கொடுத்தார். இவரின் இந்த பேச்சை கேட்டவர்கள், ஆராவாரம் செய்தனர்.