பாஜக-வை எதிர்த்தால் தேச துரோகிகளா?..மு.க.ஸ்டாலின்

629

பா.ஜ.க வை எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள் என்றால் அந்தப்பட்டத்தை பெருமையோடு பெற்றுக்கொள்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.உயர்சாதி ஏழைக்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கியதன் மூலம் உண்மையான ஏழைகளுக்கு மோடி துரோகம் இழைத்து விட்டதாக தெரிவித்தார். மத்திய பா.ஜ.க அரசு நாட்டை மதத்தால் பிளவுப்படுத்துவதாக குற்றம் சாட்டினார். மற்ற மாநிலங்களுக்கு மோடியை வீழ்த்துவது என்கிற ஒரு வேலை தான் உள்ளதாகவும், ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க அரசையும் சேர்த்து வீழ்த்த வேண்டும் என்ற இரண்டு வேலை உள்ளதாக கூறினார். மத்திய ஆட்சியில் சனாதனவாதிகள் இருப்பதால் அவர்களை அகற்ற  கூர்மையாக போராட வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement