நாளை சோனியா காந்தியை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

586

மறைந்த திமுக-வின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுப்பதற்காக நாளை டெல்லி செல்கிறார் திராவிட முன்னேற்ற கட்சியின் தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் உருவச்சிலை திறப்பு விழா வருகிற 16ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்க இருக்கிறது. கருணாநிதியின் உருவச்சிலையை முன்னாள் காங்கிரஸ் தலைவர், சோனியா காந்தி திறந்து வைக்கிறார். விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராய் விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அங்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து கருணாநிதி உருவ சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை கொடுத்து விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of