கருணாநிதி இல்லத்தில், வருகை பதிவேட்டில் உருகிய ஸ்டாலின்

416

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து, அக்கட்சியில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் மறைந்த தலைவர் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளைக்கு சென்ற ஸ்டாலின் அங்குள்ள கலைஞரின் இல்லத்தில் உள்ள வருகை பதிவு நோட்டு புத்தகத்தில் ஸ்டாலின் உருக்கமாக எழுதி எழுதியுள்ளார்.

அதில்,

தலைவர் அவர்களின் பிறந்த ஊர் திருக்குவளைக்கு பல முறை வந்துள்ளேன்.

தலைவர் கலைஞருடன் வந்துள்ளேன், தனியாகவும் வந்துள்ளேன். இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக வந்துள்ளேன்.

கழக தலைவராக வந்திருந்தாலும் தலைவர் கலைஞர் அவர்களின் தொண்டனாக அவர் காட்டிய வழியில் எனது பயணம் தொடர்ந்து தொடரும்.

வாழ்க கலைஞர்,

என்று ஸ்டாலின் உருக்கமாக எழுதியுள்ளார்.