பேனர்கள் வைப்பதை தவிருங்கள் – தி.மு.க தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

314

பேனர்கள் வைப்பதை முழுமையாக தவிர்க்குமாறு, தி.மு.க தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தில் பேனர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கைகளை தவிர்க்குமாறு, அறிவுறுத்தி உள்ளார். பேனர்கள் கூடாது என பலமுறை தாம் நினைவுப்படுத்தி இருந்ததாக சுட்டிக்காட்டி உள்ளார். எனவே, மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், பேனர்கள் வைப்பதை தி.மு.க தொண்டர்கள், முழுமையாக தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். பேனர் தடை தொடர்பான நீதிமன்ற தீர்ப்புக்கும் அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of