அரசின் திட்டங்களுக்கு ஸ்டாலின் தவறான குற்றச்சாட்டு – முதலமைச்சர் பழனிசாமி

79

அரசின் திட்டங்களுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைப்பதை பொறுக்க முடியாமல், அரசின் மீது ஸ்டாலின்   தவறான குற்றச்சாட்டுகள் வைப்பதாக மு தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் 40 கோடி ரூபாய் மதிப்பிலான பால பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, சேலத்தை போக்குவரத்து நெரிசல் இல்லாத, விபத்து இல்லாத பகுதியாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

சேலத்தில் பஸ் போர்ட் என்ற பெயரில் அதிநவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நடத்திட்டங்களுக்கு யார், எந்த தடைகள் போட்டாலும், அதை தகர்த்து எறிவோம் என்று தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, அரசின் திட்டங்களுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைப்பதை பொறுக்க முடியாமல், அரசின் மீது ஸ்டாலின்  தவறான குற்றச்சாட்டுகள் வைப்பதாக கூறினார்.

கிராமங்கள் தான் கோவில் என்பதை ஸ்டாலின் தற்போது தான் கண்டுபிடித்துள்ளதாக கூறிய முதலமைச்சர், ஸ்டாலின் நகரத்தில் பிறந்து வளர்ந்தவர் என்றும் தாங்கள் கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள் எனவும் கூறினார்.

தூங்கும் போது ஸ்டாலின் தன்னை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.