10 ரூபாய்க்கு புடவை வழங்கப்படும் என்று விளம்பரம்- நெரிசலில் சிக்கி 10 பேர் மயக்கம்

464

ஐதராபாத் அருகேயுள்ள சித்திபேட்டையில் இயங்கிவரும் ஜவுளிக்கடையில் 10 ரூபாய்க்கு புடவை வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் அதிகாலை முதலே அந்த ஜவுளிக்கடைக்கு பெண்கள் படையெடுக்க துவங்கியுள்ளனர்.கூட்டம் அதிகரித்ததால், கடை நிர்வாகம் கடையின் ஷட்டரை மூடியது. இதனால் நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் கடையின் ஷட்டரை உடைத்துக்கொண்டு உள்ளே போக முயற்சி செய்ததால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

கூட்டத்தில் சிக்கிய 10க்கும் மேற்பட்ட பெண்கள் காயம் அடைந்தனர். மேலும் ஒரு பெண் வைத்திருந்த  புடவை வாங்க வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மற்றொருவர் அணிந்திருந்த தங்க சங்கிலி ஆகியவை கூட்டத்தில் காணாமல் போனது.

தகவல் அறிந்து வந்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of