இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்..!

3545

கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகளை ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே தமிழ் ரசிகர்கள் கண்டு வந்த நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் என்ற தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.

இந்த தொலைக்காட்சியில் விளையாட்டு போட்டிகளின் காமெண்டரிகள் அனைத்தும் தமிழ் மொழியில் கேட்கும் படி அமைந்திருந்தது. இந்நிலையில், பல்வேறு சமூக வலைதளங்களில் செயல்பட்டு வரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல், தற்போது இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளது.

இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பல்வேறு விளையாட்டு போட்டிகளை பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிபுணர்களின் கலந்துரையாடல், ரகளை வித் ரமேஷ், ஒரு கதை சொல்லட்டா சார் வித் ஹேமந்த் பத்தானி, ஸ்டார்-ஐ கேளுங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் புரோமா வீடியோக்களையும் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடரும் படி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீ-காந்த், பத்ரிநாத், லஷ்மிபதி பாலாஜி, நிகழ்ச்சி தொகுப்பாளினி பாவனா உட்பட பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of