“26ல் வந்தேன் இப்போ 40 ஆகிடுச்சு” | Vidya Balan | Nerkonda Parvai

490

சில நிராகரிப்புகளால் தமிழில் அறிமுகமாகாமல் ஹிந்தியில் அறிமுகமான நடிகை தான் கேரளாவை சேர்ந்த வித்யா பாலன். அண்மையில் தமிழில் அஜித் அவர்களுடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார்.

vidya-balan

சில நாட்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பொதுவாக திரையுலகில் இருக்கும் நடிகைகள் 26 வயதில் திருமணம், குழந்தைகள் என்று செட்டில் ஆகி விடுவார்கள். ஆனால் நான் 26 வயதில் தான் சினிமா உலகிற்குள் நுழைந்தேன். அதனால் என்னுடைய திரை பயணம் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வரும் என்று அஞ்சினேன்.

40 வயதுடைய நான் 14 வருடங்களாக திரை துறையில் இருக்கிறேன். என் வாழ் நாள் முழுவதும் நடிப்பதையே உயிராக நினைக்கிறேன் என்று கூறினார்.