படகில் தொடங்கும் அரசியல் பிரச்சாரம்.

223

பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, உத்தரபிரதேச மாநில கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தை கடந்த வாரம் குஜராத் மாநிலத்தில் தொடங்கினார்.

இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ள பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள கங்கை நதிக்கரையில் படகு பயணம் மேற்கொள்ள உள்ளார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் விஜேந்திர திரிபாதி கூறுகையில், உ.பி.யில் தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ள பிரியங்கா, கங்கை நதிக்கரையில் மூன்று நாட்கள் படகு பயணம் மேற்கொள்ள உள்ளார். நதிக்கரை வழியாக பிரசாரம் செய்யும் முதல் தலைவர் பிரியங்கா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 18-ம் தேதி பிரயாகராஜ் நகரின் சத்நாக் பகுதியிலிருந்து தொடங்கி 140 கி.மீ. தூரம் படகில் பயணித்து அங்குள்ள கிராமங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொள்கிறார். கங்கா யாத்ரா என பெயரிடப்பட்டுள்ள இந்த பயணம் சத்நாக் பகுதியிலிருந்து தொடங்கி வாரணாசியின் அஸி காட் வரை செல்கிறார் என தெரிவித்துள்ளார்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of