ஏடிஎம் சேவை..! எஸ்பிஐ கொடுத்த அதிரடி ஆஃபர்..! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!

1272

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஏடிஎம்களில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக வங்கிகளின் பிரதிநிதிக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், 12 மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டும் பணம் எடுப்பது, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேலே பணம் எடுக்கும் போது ஒடிபி வசதியை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு ஐடியாக்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு முக்கிய சலுகைகளை எஸ்.பி.ஐ வங்கி அளித்துள்ளது. அதன்படி, ரூபாய் 25ஆயிரம் மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பவர்கள் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 40 முறை ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம்.

1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை மினிமம் பேலன்சாக வைத்திருப்பவர்கள், அன்லிமிடெட்டாக ஏடிஎம் சேவையை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 25 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு 8 முதல் 10 முறை பணம் எடுக்க முடியும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of