ராம்குமார் தற்கொலை.. தூசி தட்டும் மனித உரிமை ஆணையம்.. அதிரடி நடவடிக்கை..

1184

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், ஸ்வாதி என்ற இளம்பெண், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ராம்குமார் என்ற நபர் தான் இந்த கொலைக்கு காரணம் என்றும், ஒரு தலை காதல் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றது என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், தற்கொலை செய்துக்கொண்டதாக செய்திகள் வெளியானது. அன்றைய நாட்களில் இந்த விஷயம் மிகவும் பரபரப்பாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், மாநில மனித உரிமை ஆணையம், 4 வருடங்களுக்கு பிறகு, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

மேலும், புழல் சிறையில் பணியாற்றி வந்த அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு பிறகு, பல்வேறு தகவல்கள் வெளியாகலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement