திமுக வழக்கு தொடர்ந்துள்ளதை கண்டு அச்சப்படப்போவதில்லை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

564

திமுக வழக்கு தொடர்ந்துள்ளதை கண்டு அச்சப்படப்போவதில்லை என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று நிலையத்தில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் பிரச்சார வாகனங்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் ஒப்பந்தங்களை ஒதுக்கி உள்ளோம் என்றும் திமுக வழக்கு தொடர்ந்துள்ளதை கண்டு அச்சப்படப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.