அரசியல் எதிரிகளால் உருவாக்கப்படும் சூழ்ச்சிகளை தகர்த்து வெற்றி பெறுவேன் – விஜயபாஸ்கர்

439

குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று சிபிஐ அதிகாரிகள் பல மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குட்கா மற்றும் பான்மசாலா தொடர்படைய மாதவ்ராவ் என்ற நபரை நேரடியாகவே அல்லது மறைமுகமாகவே சந்திக்காத நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி தன்னை அரசியலில் இருந்து அழித்துவிடலாம் என்று மனப்பால் குடிப்பதாக தெரிவித்துள்ளார்.

சிபிஐ அதிகாரிகளின் எந்த விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளதாகவும், நேற்று நடந்த சோதனைக்கும் தனது முழு ஒத்துழைப்பு அளித்ததாக கூறியுள்ளார்.

குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார் என்று குறிப்பிட்டுள்ள அவர், மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றும் இந்த பிரச்சனையை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொண்டு வெளி வருவேன் என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement