பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கு – பாமக பிரமுகர் கைது

303

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த கலியப்பேட்டை கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 1998-ம் ஆண்டு பெரியார் சிலை நிறுவப்பட்டது.

அந்த சிலையின் முகம், கை பகுதி கடந்த 23-ம் தேதி இரவு மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் சாலவாக்கம் போலீசார் துணியை கொண்டு சிலை மூடி மறைத்தனர்.

மேலும் சேதமடைந்த பெரியார் சிலை காவல்துறையால் சீரமைத்தனர். சிலையை சேதப்படுத்தியர்களை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் கலியப்பேட்டையை சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே பாமக பிரமுகர் தாமோதரனை செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் கைது செய்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of