சிலைக் கடத்தல் வழக்கு – தொழிலதிபர் ரன்வீர் ஷா நேரில் ஆஜராக சம்மன்

799

சிலைக் கடத்தல் வழக்கில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ரன்வீர் ஷா இன்று காலை 10 மணிக்கு நேரில் ஆஜராக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.

அண்மையில் தொழிலதிபர் ரன்வீர் ஷா வீடுகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.  பண்ணை வீடுகளிலும், சென்னை வீட்டிலும் போலீசார் நடத்திய சோதனையில் தொன்மையான பல நூறு சிலைகள் கைப்பற்றப்பட்டன.

இதைதொடர்ந்து நேற்று அவருக்கு தொடர்புடைய இருவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதனிடையே சிலை கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் கோரி, ரன்வீர் ஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் ரன்வீர் ஷா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு காவல்துறை சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

இதில், சிலை கடத்தல் வழக்கில் ரன்வீர் ஷாவை தேடி வருவதாகவும், அவர் வெளிநாடுகளுக்குச் செல்ல முயன்றால், அவரை பிடித்து ஒப்படைக்குமாறும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே சிலைக் கடத்தல் வழக்கில் ரன்வீர் ஷா இன்று காலை 10 மணிக்கு நேரில் ஆஜராக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.