தஞ்சை பெரிய கோவிலில் பழமையான நடராஜர் சிலை உட்பட 10 சிலைகள் மாயம்

1619

தஞ்சை பெரிய கோவிலில் பழமையான நடராஜர் சிலை உட்பட 10 சிலைகள் திருடு போயுள்ளது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தஞ்சை பெரிய கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள், பொன் ஆபரணங்கள் மாயமானதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து ராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவி சிலை மீட்கப்பட்டன.

இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான 50க்கும் அதிகமான அதிகாரிகள், தஞ்சை பெரிய கோவிலில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.Temple

பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து பழமையான நடராஜர் சிலை உட்பட 10 சிலைகள், திருடப்பட்டு அங்கு போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ADSP ராஜாராமன், பல சிலைகள் மாயமாகியுள்ளது குறித்தும், சில சிலைகள் மாற்றப்பட்டது தொடர்பாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

பல சிலைகளில் தற்போதைய தமிழில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதால் சிலைகள் களவாடப்பட்டு , போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.

Advertisement