சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் 2வது நாள் ஆய்வு

  501

  திருவாரூர் தியாகராஜர் கோயில் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் தொல்லியல் துறை மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் இன்று 2 வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

  திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு கோயில் சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

  அதன்படி, இங்கு, 4,359 பழமையான ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

  இதனால், இந்த சிலைகள் பாதுகாப்பு மையத்தில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்நிலையில், சிலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என புகார் எழுந்ததை தொடர்ந்து, கடந்த 16 ஆம் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் இங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

  இதையடுத்து நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ADSP ராஜாராமன், தொல்லியல் துறை தென்மண்டல இயக்குநர் நம்பிராஜன் தலைமையில் 70பேர் அடங்கிய குழுவினர் சிலைகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.

  இந்நிலையில் இந்த ஆய்வு இன்று இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது.

  இந்த ஆய்வானது மேலும், ஒரு சில நாட்கள் நீடிக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Leave a Reply

  avatar
    Subscribe  
  Notify of