“நரேந்திர மோடி” படம் வெளிவர தடை ?

569

ஓமுங் குமார் இயக்க, சந்தீப் சிங் தயாரிக்க விவேக் ஓபராய், ராஜேந்திர குப்தா, போமன் இரானி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் நரேந்திர மோடி. பிரதமரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 5ம் நாள் திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் தற்போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு தடை கோரி தேர்தல் ஆணையத்திடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனு அளித்துள்ளது. தேர்தல் நேரத்தில் திரைப்படம் வெளியாவது நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாக அமைந்துவிடும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of