நிபந்தனைகளுடன் தடை நீக்கம் பெற்ற டிக் டாக் செயலி

362

கடந்த சில நாட்களுக்கு முன் டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டுமென்றும். டிக்-டாக் செயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது என்றும், மேலும் இந்த வழக்கு குறித்து மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

ஆனால் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே டிக்-டாக் செயலி மீதான நடவடிக்கை குறித்து மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் உத்தரவிட்டு, விசாரணையை 24-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ‘சமூக சீர்கேட்டை உருவாக்கும் வீடியோக்கள் சிறுவர், சிறுமியர் தொடர்பான ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடாது’ என்ற நிபந்தனையுடன் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது.

டிக் டாக் நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of